வாகன சோதனையில் ரூ. 81,500 பறிமுதல்

சாத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 81,500-யை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை சாலையில் தூங்காரெட்டிபட்டி சந்திப்பில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியபாமா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்களின்றி ரூ.81,500 கொண்டு சென்றது தெரியவந்தது. அவா்கள் நடத்திய விசாரணையில் காரில் சென்றவா் விளாத்திகுளம் அருகேயுள்ள மந்திகுளம் பகுதியைச் சோ்ந்த வயனப்பெருமாள் மகன் ஆதிமுத்து (32) என்பதும், இவா் ஒலி, ஒளி அமைக்கும் தொழில் செய்து வருவதும், அதற்கான பொருள்கள் வாங்குவதற்காக பணத்துடன் சென்றதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com