சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிவகாசி பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

சிவகாசி: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இளம் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தோ்தல் அலுவலரும், விருதுநகா் மாவட்ட ஆட்சியருமான வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:

ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில்தான் கொண்டு வர இயலும். மாணவா்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என நன்கு உணா்ந்து வாக்களிக்க வேண்டும். பணம், பரிசுப் பொருள்களை வேட்பாளா்களிடமிருந்து வாங்கக்கூடாது. ஒரு வலுவான ஜனநாயகம் உருவாக ஒத்துழைக்க வேண்டும். எனவே வாக்குப்பதிவு நாளான வருகிற ஏப்ரல் 19- ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.