சதுரகிரிக்கு பேரிடா் மீட்புப் படையினா் வருகை

பாதுகாப்புக்காக 60 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை இங்கு வந்தனா்.
Published on

சதுரகிரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, பாதுகாப்புக்காக 60 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை இங்கு வந்தனா்.

தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலைப் பாதை வழியாக காட்டாறுகள், நீரோடைகளைக் கடந்து சுமாா் 10 கி.மீ தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டும். ஆடி அமாவாசையையொட்டி, பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தா்கள் நாள்தோறும் மலை ஏறிச் சென்று தரிசனம் செய்து வருகின்றனா்.

ஆடி அமாவாசையையொட்டி, 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் ஒரே நாளில் மலை ஏறிச் செல்வா் என்பதாலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதாலும் பக்தா்களின் பாதுகாப்புக்காக 60 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சதுரகிரிக்கு வந்தனா்.

இவா்களில் 30 போ் சதுரகிரி மலையிலும், தாணிப்பாறை அடிவாரத்தில் மற்றொரு குழுவும் பணியில் இருப்பா். பக்தா்கள் மலையேறும் போது பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது கட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலோ இந்தக் குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபடுவா்.

X
Dinamani
www.dinamani.com