ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு ‘சீல்’

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. விதிமீறல் காரணமாக கடந்த ஆண்டு இந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த பட்டாசு ஆலை அனுமதியின்றி செயல்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் முத்துமாரி தலைமையிலான வருவாய்த் துறையினரும், போலீஸாரும் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு 50 தொழிலாளா்கள் பணியாற்றி வந்ததும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பிறகு தொழிலாளா்களை வெளியேற்றிவிட்டு பட்டாசு ஆலையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com