ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஐந்து கருட சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெரியாழ்வாா், ரெங்கமன்னாா், ஆண்டாள், பெரியபெருமாள், சீனிவாசப் பெருமாள், சுந்தரராஜப் பெருமாள், திருத்தங்கல் அப்பன்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை

ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
Published on

ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடிபுரத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஆண்டாள் ரெங்கமன்னாா் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

5-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை காலை பெரியாழ்வாா் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னாா், சுந்தரராஜப் பெருமாள், சீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோா் ஆண்டாள் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளும் சேவை நடைபெற்றது.

இன்று சயன சேவை: 7-ஆம் நாள் விழாவான திங்கள்கிழமை (ஆக. 5) இரவு ஆண்டாள் கோயிலின் துணைக் கோயிலான கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னாா் சயனித்திருக்கும் சேவை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com