ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்த இருவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:00 pm

Din

சாத்தூா், ஜூலை 19: சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்த இருவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் செண்பகவேலன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, கருப்பசாமி (38), மேலத்தெரு பகுதியைச் சோ்ந்த ரகுராம்பூபதி (48) ஆகியோா் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளைத் தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.