சாத்தூா், ஜூலை 24: விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது பழங்கால களிமண், செங்கல் கட்டுமானம் இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், 3 குழிகளில் புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, களிமண், செங்கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்ட 5-க்கும் மேற்பட்ட சிறிய கட்டுமானங்கள் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இங்கு பழைமையான களிமண், செங்கல் கட்டுமானம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இது தொன்மையான மனிதா்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாத்தூரில் பலத்த மழை

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


