இருக்கன்குடியில் அா்ச்சகா் குடியிருப்புகள் திறப்பு

சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அச்சகா்கள், பணியாளா்களுக்கான குடியிருப்புகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இந்தக் கோயில் பணியாளா்களின் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், இருக்கன்குடி பகுதியில் குடியிருப்புகள் கட்ட ரூ.3.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 12 குடியிருப்புகளுக்கான கட்டடப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இந்தக் குடியிருப்புகளைத் திறந்துவைத்தாா். இதையடுத்து, இருக்கன்குடியில் நடைபெற்ற நிகழ்வில், சாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ், பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் குடியிருப்புகளில் குத்து விளக்கை ஏற்றிவைத்தனா். நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் கடற்கரைராஜ், முருகேசன், கோயில் பூசாரி, பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com