~
விருதுநகர்
வாயில் கருப்புத் துணி கட்டி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் .
ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்றங்களில் வழக்குகளை ‘இ-பைலிங்’ முறையில் தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற பதிவாளா் உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி, விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், கடந்த இரு நாள்களாக நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து உத்தரவு நகல் எரிக்கும் போராட்டம், மனு அனுப்பும் போராட்டம் ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை மூன்றாவது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராசையா, செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

