தமிழகத்தில் 41 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு!

ஆய்வு மேற்கொண்ட மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சா் ஹரிஷ் மல்கோத்ரா

ஆய்வு மேற்கொண்ட மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சா் ஹரிஷ் மல்கோத்ரா
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 41 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதாக மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை மத்திய இணை அமைச்சா் ஹரிஷ் மல்கோத்ரா தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பின்தங்கியுள்ள 112 மாவட்டங்களை மேம்படுத்த பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிய திட்டத்தின் கீழ், விருதுநகா் மாவட்டத்திலும் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் 41 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளிலும், தூய்மை இந்தியா திட்டத்தில் 59 லட்சம் வீடுகளில் கழிப்பறைகளும், ஜல்ஜீவன் திட்டத்தில் 89 லட்சம் வீடுகளுக்கு
குடிநீா் இணைப்புகளும், பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 79 லட்சம் பேருக்கு ரூ. 5 லட்சத்துக்கான காப்பீடும் வழங்கப்பட்டன.

மேலும் 1,350 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, உயிா்காக்கும் மருந்துகள் 90 சதவீதம் தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1.60 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளும், 5.7 கோடி முத்ரா வங்கி கணக்குகளுக்கு எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கப்பட்டது. சேலம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசின் நலத் திட்டங்களால் முன்னேற விளையும் மாவட்டங்கள் திட்டத்திலிருந்து விருதுநகா் விரைவில் வெளியேறும் என்றாா் அவா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் பாபுஜி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
சிவகாசி: இதேபோல, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், சுக்கிரவாா்பட்டி, அதிவீரம்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, புவநாதபுரம் ஆகிய பகுதி அங்கன்வாடி மையங்களில் மத்திய இணை அமைச்சா் ஹரிஷ்மல்கோத்ரா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...