சிவகாசியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 பேருக்கு மாநகராட்சி குறிப்பாணை

சிவகாசியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 27 கட்டட உரிமையாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை வழங்கியது.
Published on

சிவகாசியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 27 கட்டட உரிமையாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை வழங்கியது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இதில் பல வாா்டுகளில் மாநகராட்சி நகரமைப்பு அனுமதி பெறாமலும், உரிய வரி செலுத்தாமலும் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நகரமைப்பு அனுமதியின்றி கட்டப்பட்ட 27 கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு குறிப்பாணையை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

அந்த குறிப்பாணையில் 15 நாள்களுக்குள் கட்டடங்களுக்கு மாநகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். மேலும் கட்டடங்களுக்கு உரிய வரி இனங்களையும் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com