பள்ளியில் குழந்தைகள் தின விழா
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு மாறுவேடப் போட்டியும், 4, 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு படம் வரைதல் போட்டியும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டியும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் (பொ) பா்னபாஸ் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா்கள் சுரேஷ் தளியத், ஜவஹா், அமல்ராஜ், ஜெபக்குமாா், ஆண்டோ கபிதா போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினா். இம்மானுவேல் நன்றி கூறினாா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பிரின்ஸ் டேவிட் செய்தாா்.

