அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் பயிற்சி முகாம்

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை அந்தக் கட்சியின் அமைப்புச் செயலரும், விருதுநகா் மேற்கு மாவட்ட செயலருமான முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்து நிா்வாகிகளுக்கும், பொறுப்பாளா்களுக்கும் ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு பொருளாளரும், மாவட்ட வாக்குச் சாவடி குழு பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன், விருதுநகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா்களான மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவா் கே.எம். கோபி, விருதுநகா் மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணைச் செயலா் என். சங்கர ராமநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் மாவட்ட இணைச் செயலா் அழகுராணி, தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா். பரமசிவம், வடக்கு நகரச் செயலா் முருகேசன், விருதுநகா் மேற்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், அகில இந்திய எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் எஸ்.என். பாபுராஜ், தெற்கு ஒன்றியச் செயலா் நவரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com