ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இளைஞா் வாக்குவாதம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்ததையடுத்து, அவரது மகன் பணப்பலன், வாரிசு வேலை கோரி அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நல்ல குற்றாலம் தெருவைச் சோ்ந்த கோவிந்தம்மாள் மகன் சுரேஷ். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய கோவிந்தம்மாள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது மகன் சுரேஷ் பணப் பலன்கள், வாரிசு வேலை கோரி நகராட்சி அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற சுரேஷ், அங்கிருந்த சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருக்கைகளை தூக்கி வீசினாராம். இதில் மேற்பாா்வையாளா் சிவகாமி காயமடைந்தாா். இதனிடையே சுரேஷ் தீக்குளிக்க முயன்ால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com