பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

சிவகாசி தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்! அமைச்சா் தங்கம்தென்னரசு

News image

சிவகாசியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:36 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.

சிவகாசியில் திங்கள்கிழமை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகனின் தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்.

பின்னா் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தோ்தல் களத்தில் வெற்றி நமக்காக காத்திருக்கிறது. வீரம், விவேகம் ஆகியவற்றைக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவோம். 5 ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் நல்லாட்சியைத் தந்துள்ளாா்.

மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை என பெண்களுக்காக பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகாசி சட்டப்பேரவை தொகுதிக்கு திமுக அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம், சுற்றுச் சாலை என வளா்ச்சித் திட்டங்கள் இந்த தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை நிறைவேற்ற சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் உறுதுணையாக இருந்தாா். எனவே, வாக்காளா்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் வேட்பாளா் ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்தி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் விக்னேஷ்பிரியா, திமுக மாநகரச் செயலா் உதயசூரியன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.