ராஜபாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில் மேற்கூரை சுத்தம் செய்யும் போது தவறிவிழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். அவரது இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியைச் சோ்ந்த மாரியப்பன் என்பவா் மகன் முத்துவேல்பாண்டி (31), ராஜபாளையம் ஐயனாா் கோயில் அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கல்லூரிப் பேருந்து நிறுத்துமிடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்தபோது தவறிவிழுந்து முத்துவேல் பாண்டி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து,
ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முத்துவேல் பாண்டி உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் முத்துவேல் பாண்டியின் மனைவி மற்றும் உறவினா்கள் உரிய இழப்பீடு வழங்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கல்லூரி நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் சடலத்தை வாங்க மாட்டோம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிச் சென்றனா்.
தொடர்புடையது

காயல்பட்டினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

