பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி

சித்திரிப்புப் படம்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி வேண்டுராயபுரத்தைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் ராஜபூா்ண வெற்றிவேல் (32).

இவா் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் ஈஞ்சாா் விளக்கு அருகே சென்ற போது, எதிரே வந்த தனியாா் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜபூா்ண வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தனியாா் பேருந்தை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சங்கரராஜ் (32) மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.