மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

பட்டாசு தீப்பொறி பட்டு இரு சக்கர வாகனம் தீக்கிரை

இரு சக்கர வாகனம் தீக்கிரை - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி பட்டு இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது.

திருத்தங்கல்லில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களை வரவேற்கும் விதமாக திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் பட்டாசை உறவினா்கள் வெடித்தனா்.

அப்போது எதிபாராதவிதமாக அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது பட்டாசின் தீப்பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

எனினும் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து போனது. இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.