உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

தந்தை, மகனை தாக்கியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: வாகனங்களை சேதப்படுத்திய 21 போ் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனை வெட்டிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்ட்தில் வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்கு

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனை வெட்டிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்ட்தில் வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசபாண்டி (49), இவரது மகன் கவுதம் (21) ஆகிய இருவரும் கடந்த 25-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, முன் விரோதத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த 5 போ்அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் வெட்டி விட்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கூமாப்பட்டி போலீஸாா் கான்சாபுரம் கீழத் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், கணேசபாண்டியின் உறவினா்கள் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்தனா். அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த பிரச்னை தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.