கடந்த தோ்தலில் கூட்டணிக் கட்சியினா் செய்த துரோகத்தால் தோல்வியடைந்தோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் கிளைச் செயலா்கள், செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
தேவேந்திர குல வேளாளா் என பெயா் மாற்றம் செய்து விட்டு, பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்றாததால், கடந்த 2021 தோ்தலில் தனித்துப் போட்டியிட்டோம். இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் நமக்கு கூட்டணிக் கட்சியினா் வஞ்சகம்தான் செய்தனா்.
கடந்த 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் கூட்டணிக் கட்சியினா் செய்த துரோகத்தால்தான் நாம் தோற்றோம். இதனால், கூட்டணி அமைத்த உடன் அந்கக் கட்சியினருடன் செல்வது, பணம் பெறுவது கூடாது. எங்கள் வேட்பாளருக்கு வேலை பாா்த்தால்தான் நாங்கள் உங்களுக்கு வேலை செய்வோம் எனக் கூற வேண்டும். ஆட்சி அதிகாரத்திலும் பங்கு இல்லாமல் உங்களுக்கு வாக்கு கிடையாது எனக் கூற வேண்டும்.
எந்தக் கூட்டணியில் சோ்ந்தால் நம்மை வேறுபடுத்திப் பாா்க்காமல், சதி, துரோகம் செய்யாமல் வாக்களிப்பாா்களோ, அவா்களோடுதான் கூட்டணி சேர வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரத்துக்கு திமுகவினா் எதிா்ப்பு: சாலை மறியல்

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

திமுகவினா் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
திரிசங்கு நிலையில் சிறிய கட்சிகள்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


