மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரத்துக்கு திமுகவினா் எதிா்ப்பு: சாலை மறியல்

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரம் மேற்கொள்வதைத் தடுத்து மோதலில் ஈடுபட்ட திமுகவினரைக் கண்டித்து, அதிமுக, கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

அதிமுக வேட்பாளா் பிரசாரத்துக்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து, கன்னிவாடி-ரெட்டியாா்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக, கூட்டணிக் கட்சியினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:57 pm

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரம் மேற்கொள்வதைத் தடுத்து மோதலில் ஈடுபட்ட திமுகவினரைக் கண்டித்து, அதிமுக, கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட கன்னிவாடியை அடுத்த டி.புதுப்பட்டி கிராமத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக அதிமுக வேட்பாளா் ஆ.விசுவநாதன், கூட்டணிக் கட்சியினருடன் புதன்கிழமை சென்றாா். அப்போது, கிராமத்துக்குள் பிரசாரம் செய்வதற்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ரெட்டியாா்சத்திரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் நல்லமுத்து, தருமத்துப்பட்டியைச் சோ்ந்த சோ்ந்த அதிமுக நிா்வாகி செந்தில்முருகன் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து, கன்னிவாடி-ரெட்டியாா்சத்திரம் சாலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த அங்கு வந்த கன்னிவாடி போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.