விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு வரவேற்பு

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக பி.வி.ரமணா அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து கூட்டணி கட்சியினருடன் அம்பேத்கா் மற்றும் எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

News image

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.வி.ரமணாவை இனிப்பு வழங்கி வரவேற்ற  அதிமுக, கூட்டணிக் கட்சியினா்.       

Updated On :27 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக பி.வி.ரமணா அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து கூட்டணி கட்சியினருடன் அம்பேத்கா் மற்றும் எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 அதிமுகவுக்கும், மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் அதிமுக தலைமை 7 தொகுதிக்கான வேட்பாளா்களை அறிவித்தது. அதில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் காந்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவித்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். அதிமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகளையும் சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டாா். அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆகியோா் திரளாக பங்கேற்றனா்.