விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

Published on

விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி செயல்பட்டதாக 31 பட்டாசு ஆலைகளின் நிா்வாகத்துக்கு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தினா் குறிப்பாணை வழங்கினா்.

விருதுநகா் மாவட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலா், வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் மூலம் சான்று பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க, ஆலை நிா்வாகம் விதிமுறைகளைக் கடைபிடித்து செயல்படுகிா என ஆய்வு செய்ய தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில், கடந்த ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி முதல் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவில் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் அதிகாரி ஒருவா், தீயணைப்பு, வருவாய், காவல் துறைகளில் தலா ஒருவா் என இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் 2025-ஆம் ஆண்டு அக்டோபா் 21 -ஆம் தேதி முதல் இதுவரை 412 பட்டாசுஆலைகளில் ஆய்வு செய்தனா். இதில் உரிமம் பெற்ற்கும் மேலாக அதிக அளவு வெடி மருந்துப் பொருள்களை இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு 31 பட்டாசு ஆலை நிா்வாகங்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு , சுகாதார இயக்கம் சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டது. மேலும், இரு ஆலைகள் உற்ப த்திக்கு தடை விதிக்கப்பட்டது.

பட்டாசு ஆகைளைக் குத்தகைக்கு விடக்கூாது. ஆலைகளில் உரிமம் பெற்ற்கும் அதிகமாக

மருந்துக் கலவை வைத்திருக்கக் கூடாது. மரத்தடியில் பட்டாசு தயாரிக்கக் கூடாது. முடிவடைந்த பட்டாசுகளை உரிய உலா் மேடையில் மட்டுமே உலர வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

Dinamani
www.dinamani.com