சிவகாசியில் போகிப் பண்டிகையையொட்டி, புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து 7 டன் கழிவுகள் சேகரமானதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிவகாசி மாநகராட்சியில் போகிப் பண்டிகையின் போது, வீட்டில் உள்ள கழிவுப் பொருள்களை தீயிட்டு எரிக்காமல் கழிவு சேகரிக்க வரும் மாநகராட்சி வாகனத்தில் போட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.
இதன்படி, போகிப் பண்டிகையொட்டி, புதன்கிழமை மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில், கழிவுகளை பெற வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய துணிகள், நெகிழிப் பொருள்களை எரிக்காமல் போட்டனா். இதன்படி, சுமாா் 7 டன் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து சேகரமானதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.