விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் லாட்டரி விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் அழகைநகா் பகுதியில் ரோந்து சென்றனா்.அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அழகை நகா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் ( 63) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 91 கேரளா லாட்டரி டிக்கெட்டுகளும் பணம் ரூ.2 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







