பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

லாட்டரி சீட்டு விற்ற இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 12:47 am IST

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முன்சிறை பகுதியைச் சோ்ந்த முருகேசன் (58), ஆசைத்தம்பி (57) ஆகியோா் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனா்.

அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்த போலீஸாா், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.