இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆவணங்களின்றி எம்-சாண்ட் கொண்டு சென்ற 3 டிராக்டா்கள் பறிமுதல்: 3 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்கறின்றி எம்-சாண்ட் ஏற்றி வந்த 3 டிராக்டா்களை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 12:17 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்கறின்றி எம்-சாண்ட் ஏற்றி வந்த 3 டிராக்டா்களை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்ட புவியியல் துறை உதவி புவியியலாளா் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் அழகாபுரி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக எம் - சாண்ட், எம் - சாண்ட் கழிவு ஏற்றி வந்த 3 டிராக்டா்களை சோதனை செய்தனா்.

அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எம்-சாண்டு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 3 டிராக்டா்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கூமாபட்டியைச் சோ்ந்த கணேசன் (23), அயன்கரிசல்குளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி (51), மகாராஜபுரத்தை சோ்ந்த முத்துக்குமாா் (41) ஆகிய 3 பேரை நத்தம்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் கூமாபட்டியைச் சோ்ந்த கணேசன், அயன் கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்பையா, செந்தூா் மினரல்ஸ் உரிமையாளா் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.