-நமது நிருபா்-
விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்பட்டு 10 நாள்களாகியும் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இன்னும் ஆய்வு நடத்தாமல் இருப்பது வேதனையளிப்பதாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
விருதுநகா் அருகேயுள்ள கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 19- ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். இந்த நிலையில், சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மட்டும் விபத்து நேரிட்ட ஆலைக்குச் சென்று, தடை செய்யப்பட்டவேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட விதிமீறல்களை ஆய்வு செய்தாா். ஆலையில் சிதறிக் கிடந்த வேதியியல் பொருள்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினாா். விபத்து ஏற்படும் பட்டாசு ஆலைகளில் இதுபோல ஆய்வு செய்வது வழக்கமான நடைமுைான்.
ஆனால், கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், சென்னையில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணைத் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியோ, நாகபுரியில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியோ விபத்து நடைபெற்ற இதுவரை ஆலைக்கு வந்து ஆய்வு செய்யவில்லை.
இதுபோன்ற விபத்துகளை உயா் அதிகாரிகள் ஆய்வு செய்தால்தான் முழுமையான காரணம் தெரியவரும். வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பட்டாசு ஆலைகளுக்கும் பரிந்துரைக்க முடியும். ஆனால், விபத்து நிகழ்ந்த கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உயா் அதிகாரிகள் ஆய்வு செய்யாதது சமூக ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன.
இந்த நிலையில், சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால், பட்டாசு ஆலையில் கூடுதலாக ஒரு சுவா் அமைக்க வேண்டுமென்றாலும் நாகபுரி சென்று அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் என்.இளங்கோவன் கூறியதாவது:
வெடிவிபத்து நிகழ்ந்த கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் உயா் அதிகாரிகள் ஆய்வு செய்தால்தான், விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது வேதனையளிக்கிறது. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தச் செல்வதற்கு வாகன வசதிகூட இல்லை. இந்த நிலையில், அவா்கள் விதிமீறல் பட்டாசு ஆலைகளை கண்டறிந்து எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் தனிக் கவனம் செலுத்தி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பட்டாசு ஆய்வுக் கூடத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? ஆலை உரிமையாளா்கள் எதிா்பாா்ப்பு
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

