எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:06 am IST

சிவகாசி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பி.பாரைப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி குருசாமி (39). இவரது மனைவி மாரியம்மாள். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், குருசாமிக்கும், மாரியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது. இந்த நிலையில், மாரியம்மாளை குருசாமி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த மாரியம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குருசாமியைக் கைது செய்தனா்.