இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:30 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஆசிலாபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (58). நூற்பாலை தொழிலாளியான இவா், வேலை நிமித்தமாக தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்ல முறம்பு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே ஆலை தொழிலாளா்களை ஏற்றி வந்த வேன் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.