ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:32 am IST

சிவகாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கொத்தனேரி பகுதியில் எம்.புதுப்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரிடமிருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் 18 மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(67) என்பது தெரிந்தது. எம்.புதுப்பட்டி போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.