11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை!

அருப்புக்கோட்டையில் சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனையைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :44 நிமிடங்கள் முன்பு

அருப்புக்கோட்டையில் சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனையைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் 717 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. இதில் அருப்புக்கோட்டையில் நகா் பகுதியில் ஐந்து அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப் பிரியா்கள் மதுப் புட்டிகளை தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலா் சட்ட விரோதமாக வெள்ளகோட்டை, கல் பாலம், புதிய பேருந்து நிலையம். திருச்சுழி ரோடு பழைய பேருந்து நிலையம், பந்தல்குடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 5 மணிக்கே மதுப் புட்டிகளை இரு மடங்கு விலைக்கு விற்று வருகின்றனா். இதேபோல சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பவா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.