புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவா் கைது
வெம்பக்கோட்டை அருகே புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
வெம்பக்கோட்டை அருகே புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை- சிவகாசி சாலையில் காவல் சிறப்பு ஆய்வாளா் பால்ராஜ், போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில், தென்காசி மாவட்டம், வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (54), அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (29) என்பது தெரியவந்தது. பின்னா், இருவரையும் வெம்பக் கோட்டை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

