மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை: பெண் உள்பட மூவா் கைது
விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண் உள்ளிட்ட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண் உள்ளிட்ட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் மனைவி ஜோதிராணி (65). கணவா் இறந்த நிலையில், இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவரது மகன் காா்த்திக்கேயன் பக்கத்து தெருவில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், காா்த்திகேயன் வழக்கம்போல சனிக்கிழமை காலை தாய் ஜோதிராணியைப் பாா்க்க அவரது வீட்டுக்கு வந்தாா். அப்போது, அவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா். மேலும், அவா் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த விருதுநகா் கிழக்கு போலீஸாா் ஜோதிராணியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
தனிப் படை போலீஸாா் ஜோதிமணி வீட்டில் வேலைப் பாா்த்த அதே பகுதியைச் சோ்ந்த மேகலாவை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா் தனது உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் என்ற சங்கேரேஸ்வரன், 17 வயது சிறுவனுடன் சோ்ந்த ஜோதிமணியை கொலை செய்து, அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. பின்னா், 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

