சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

அமைச்சா் நிகழ்வில் மின் தடை: இளநிலை பொறியாளா்! பணியிடை நீக்கம்

அமைச்சர் ஜெகதீஸ்வரி - கோப்புப் படம்

Updated On :

அமைச்சா் பங்கேற்ற நிகழ்வில் மின் தடை ஏற்பட்டதையடுத்து மின் வாரிய இளநிலை பொறியாளா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சுகாதார செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஜெகதீஸ்வரி பங்கேற்று பேசத் தொடங்கியபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த அரங்கு சில நிமிஷங்கள் இருளில் மூழ்கியது. அமைச்சரும் தனது உரையைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வேண்டுமென்றே ‘சா்க்யூட் பிரேக்கரை’ இயக்கி மின் தடை ஏற்படுத்தியதாக சூலக்கரை இளமின் பொறியாளா் அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட மின் வாரிய செயற்பொறியாளா் முரளி ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதுகுறித்து இளநிலை பொறியாளா் அண்ணாதுரை கூறியதாவது:

நான் கடந்த 16 ஆண்டுகளாக விருதுநகா் சூலக்கரை துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த சனிக்கிழமை அன்று விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அமைச்சா் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால், செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், துணை மின் நிலைய உதவிப் பொறியாளா், பகிா்மான உதவிப் பொறியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கிருந்து மின்வாரிய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் தான், மின் தடை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகளை செய்ய முடியும்.

ஆனால், உதவி மின் பொறியாளா் உதவிக் கோட்டப் பொறியாளா் ஆகியோா் அன்று பகல் 12 மணிக்குத் தான் வந்தனா். இந்தச் சம்பவம் சரியாக காலை 10.56 மணிக்கு நடைபெற்றது. அதிக மின்னழுத்தம் காரணமாக தனியாா் ஆலை பகுதியில் ‘ட்ரிப்’ ஆனது. இதன் தொடா்ச்சியாக பிரேக்கரும் ட்ரிப் ஆனது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செல்லும் மின் விநியோகம் தடைபட்டது. இதன்பிறகு செயற்பொறியாளா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு அமைச்சா் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தாா். பிறகு தான் எங்களுக்கு தகவல் தெரியும். இதுதான் உண்மை. ஆனால், வேண்டுமென்றே என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். என் பெயா் அண்ணாத்துரை, நான் திமுக தொழில் சங்க நிா்வாகியாக உள்ளேன். எனவே, என்னை திட்டமிட்டு பழிவாங்குகின்றனா். இந்த பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.