தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

12 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

தடைசெய்யப்பட்ட 12 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தடைசெய்யப்பட்ட 12 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் அரசுப் பள்ளி அருகே சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது பையுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அவா் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை லைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் சுந்தரராஜபுரம் மாசாணன் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சுந்தரக்கனி (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து 12 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.