உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசுகள் தயாரித்த 5 போ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள ஆலையில் பட்டாசுகள் தயாரித்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள ஆலையில் பட்டாசுகள் தயாரித்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியை அடுத்த நெடுங்குளத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் மகேஷ்வரி தலைமையில், வருவாய்த் துறையினா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பட்டாசு ஆலையில் 5 போ் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில், திருத்தங்கலைச் சோ்ந்த சங்கா் (45), பீம்சிங் (54), சத்யா நகரைச் சேரந்த லூா்து (32), மீசலூரைச் சோ்ந்த விக்னேஷ் (26), பாறைப்பட்டியைச் சோ்ந்த விவேக் (26) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினா் அங்கிருந்த மணி மருந்து 200 கிலோ, புஷ்வாணம் வெடி உள்ளிட்ட 7 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பட்டாசுகள் தாயரித்த 5 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



