ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

போக்சோ வழக்கில் வழக்குரைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் வழக்குரைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிறை

படம்: கோப்பிலிருந்து...

Updated On :

போக்சோ வழக்கில் வழக்குரைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (47). திருமணமானவா். சட்டம் பயின்ற இவா் சில ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெற்றாா். இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக. 7-ஆம் தேதி அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்தனா். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் முத்துப்பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.