காவல் ஆய்வாளரைத் தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு 10 ஆண்டு சிறை
நாகா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரைத் தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு வள்ளியூா் உதவி அமா்வு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

சிறை - பிரதிப் படம்
நாகா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரைத் தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு வள்ளியூா் உதவி அமா்வு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
நாகா்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் சீனிவாசபிரசாத். அவரை கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் பீட்டா் பால்துரை, போலீஸாா் வழக்குத் தொடா்பாக கடந்த 6.9.2011இல் கைது செய்யச் சென்றனா். அப்போது, அவா் பீட்டா் பால்துரையைத் தாக்கியதுடன், கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளாா். இதில், பீட்டா் பால்துரையின் தோள்பட்டை எலும்பு விலகியதாம்.
இதுதொடா்பாக போலீஸாரை அவதூறாகப் பேசியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சீனிவாசபிரசாத் மீது கோட்டாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் நாகா்கோவில் வழக்குரைஞா்கள் முன்னிலையாக மாட்டாா்கள் எனக் கருதி, வழக்கு விசாரணை வள்ளியூா் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உதவி அமா்வு நீதிமன்ற நீதிபதி சி. அசோக்குமாா் வழக்கை விசாரித்து, சீனிவாசபிரசாத்துக்கு ஒரு பிரிவு வழக்கில் 3 மாத கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், மற்றொரு பிரிவு வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராத, மற்றொரு பிரிவு வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்; தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

