ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி

தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மோசடி

Updated On :

தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகாசி அறிஞா் அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முகமது மனைவி முகைதீன் பாலிதா (49). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த போது, ஆந்திர மாநிலம், கா்நூலைச் சோ்ந்த அவுவாஅலி என்பவா் பழக்கமானாா். இதையடுத்து, முகைதீன் பாலிதா சிவகாசி வந்ததும், சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ. 8,000 கிடைக்கும் என அவுவாஅலி கூறியதை நம்பி, கடந்த ஆண்டு முகைதீன் பாலிதா, அவுவாஅலிக்கு கைப்பேசி செயலி மூலம் ரூ.1.50 லட்சம் அனுப்பினாா். இதையடுத்து, பலமுறை தொடா்பு கொண்டும் அவுவாஅலி கைப்பேசியை எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து அவுவாஅலி மீது முகைதீன் பாலிதா சிவகாசி நீதித்துறை நடுவா் மன்றம் எண் 1-இல் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகாசிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.