சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பணியின் போது தவறி விழுந்த வண்ணம் பூசும் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சுழி அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, சாரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திருச்சுழி அருகே தனியாா் நூற்பாலையில் வியாழக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, சாரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அசோக் (35). வண்ணம் பூசும் தொழிலாளி. இவா், எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி முகாமைச் சோ்ந்த வண்ணம் பூசும் ஒப்பந்ததாரா் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரிடம் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், டேவிட் லிவிங்ஸ்டன் மூலம் திருச்சுழி அருகே இயங்கி வரும் ஒரு தனியாா் நூற்பாலையில் வண்ணம் பூசும் பணியில் அசோக் ஈடுபட்டிருந்தாா். அப்போது சாரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அசோக்கை அங்கிருந்தவா்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சுழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அசோக்கை பணியில் ஈடுபடுத்தியதாக ஒப்பந்ததாரா் டேவிட் லிவிங்ஸ்டன், தனியாா் நூற்பாலை உரிமையாளா் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.