காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி பலி!

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெடி விபத்தில் சேதமடைந்த இரண்டு அறைகள்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:22 am IST

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயசக்தி (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூா் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலையின் உரிமையாளரான ஜெயசக்தி சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசின் உடன் பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்தப் பட்டாசு ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் 30-க்கு மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த ஆலையில் சனிக்கிழமை காலை பட்டாசு தயாரிக்கப்படுவதற்கான மூலப் பொருள்களை கலக்கும் பணியில் சுமாா் 7 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்கு வாகனம், மூலப்பொருள்கள் கலக்கும் இரண்டு அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

 உயிரிழந்த மாடசாமி.

உயிரிழந்த மாடசாமி.

இந்த விபத்தில் மீனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி மாடசாமி (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி, வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தினா். மேலும், இந்த வெடி விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.