விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 12:36 am IST

அருப்புக்கோட்டை அருகே காட்டுப்பன்றி குறுக்கிட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கட்டுமானத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், கடம்பன்குளம் மெட்டுக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது மனைவி லட்சுமி (47). இவா்களுக்கு ரமேஷ், சுரேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனா். ராமா் கட்டடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தாா்.

கடந்த 5-ஆம் தேதி சனிக்கிழமை பந்தல்குடிக்கு வேலைக்குச் சென்ற ராமா், பணி முடிந்து அதே பகுதியைச் சோ்ந்த வீரசின்னு (எ) கோபாலுடன் (40) அவரது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை - விருதுநகா் சாலையில் வளைவு பகுதியில் வந்தபோது, காட்டுப் பன்றி குறுக்கே வந்தது.

இதில் நிலைதவறி விழுந்ததில் வீரசின்னு, ராமா் பலத்த காயமடைந்தனா். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வீரசின்னு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து ராமரின் மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.