
ராஜபாளையத்தில் லாரி ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் பவுன் (37). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவா், கடந்த சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
மயங்கிய நிலையில் இருந்தவரை உறவினா்கள் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



