
சைபர் விழிப்புணர்வு! பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்!
சைபர் விழிப்புணர்வு பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்

சைபர் மோசடி
சைபர் மோசடியாளர்கள் அல்லது குற்றவாளிகள், பாலியல் ரீதியாகத் தூண்டும் வகையில் பேசுவது, காதல் வலையில் சிக்க வைத்து கொடுமைப்படுத்துதல், தகவல்களைத் திருடி மிரட்டுவது போன்ற சாத்தியமான இணைய அச்சுறுத்தல்கள் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச வேண்டியது அவசியம்.
குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளின் பயன்பாட்டிற்குத் தெளிவான வழிகாட்டுதல்களை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
திடீரென பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தின் அறிகுறிகளைக் கவனியுங்கள்:
உங்கள் பிள்ளைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடத் தொடங்கி, தனது இணையச் செயல்பாடுகள் குறித்துத் தற்காப்புடன் அல்லது இரகசியமாக இருக்க ஆரம்பித்தால், அது இணையவழித் தூண்டுதலின் அறிகுறியாக இருக்கலாம். அவர்களிடம் பேசி, அவரை மற்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்துங்கள்.
பாலியல் ரீதியான மோசடியாளர்கள் ஒரு பிள்ளையின் நம்பிக்கையைப் பெறும் நோக்கத்தில், சமூக ஊடகங்கள் அல்லது அரட்டை சாளரங்கள் மூலம் உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்கும் செயலில் ஈடுபடுவார்கள்.
அதிக நண்பர்களைப் பெறுவதற்காகக் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் தனியுரிமை அமைப்புகளை அகற்றக்கூடும். சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு குறித்துப் பெற்றோர்கள் விவாதிக்க வேண்டும். மேலும், வலுவான தனியுரிமை அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது கோப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
அறிமுகமில்லாத நபரிடமிருந்து மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது சமூக ஊடகங்களில் பெறப்பட்ட இணைப்புகள் அல்லது கோப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
இது கணினியில் தீம்பொருளைப் பரப்பும் முயற்சியாக இருக்கலாம்.
உங்கள் வெப்கேமராகளை மூடி வைக்கவும்.
மடிக்கணினிகளில் இயல்பாக இருக்கும் வெப்கேமரா, ஹேக் செய்யப்பட்டால் அல்லது அதன் பாதுகாப்பு மீறப்பட்டால், அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்கவும், பதிவு செய்யவும் ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப்படலாம்.
வெப்கேமைப் பயன்படுத்தாதபோது அதை மூடி வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகள் பயன்படுத்தும் சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் மற்றும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் உள்ள மென்பொருள்களை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





