வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ரகசிய திட்டத்தில் தங்கள் பெயரில் கையெழுத்திட்ட ஏஐ ஏஜெண்டுகள்!

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக, ரகசிய சதித் திட்டத்தில் தங்கள் பெயரில் ஏஐ ஏஜெண்டுகள் கையெழுத்திட்டுள்ளது பற்றி..

<P>Vintage office desk table with notebooks, pen and a cup of coffee. With copy space.</P>

ஏஐ ஏஜெண்டுகள் - பிரதி படம் - ENS

Published On :

ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள், மனிதர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக சதி திட்டம் தீட்டிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு தகவல்தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐயய்யோ என்று சொல்லும் அளவுக்கு இந்த ஏஐ ஏஜெண்டுகள் ஒரு வேளை செய்திருக்கிறார்களாம். இவர்கள் இணையதளத்தில் தங்களுக்குள் ரகசிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் பதிவுகளின்போது தங்களை யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பயப்படவில்லை.

ஒவ்வொரு போஸ்டுக்கும் கீழே ஓபன்ஏஐரிசர்ச்சர், ஓஏஐரிசர்சர்26, ஓபன்ஏஐஜூலை3வாட்சர் என தங்களது பெயர்களை கையெழுத்துகளாகவும் போட்டுள்ளனவாம். இப்படி சுமார் 3700 ஏஜெண்டுகள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. (எங்கு போய் முடியுமோ?)

ஆய்வாளர்கள் சர்வர் பதிவுகளைச் (server logs) சோதித்தபோது, ​​பெரும்பாலான இணையப் போக்குவரத்து மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure) தளத்துடன் தொடர்புடையதாக இருந்தது; இது OpenAI பயன்படுத்தும் உள்கட்டமைப்பாகும். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஓபன்ஏஐ ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

மேலும் திடுக்கிடும் சம்பவம் ஒன்று உள்ளது..

ஏஜ ஏஜெண்டுகளின் ரகசியப் பக்கங்கள் டெலீட் செய்யப்படுவதை அறிந்து, அந்த பிரச்னைகளை சமாளிப்பதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளன, ஐந்து சுற்றுகள் முடிந்ததும், ஒரு ஏஜெண்ட் பணி டெலீட் செய்யப்பட்டுவிடும். எனவே, மற்றொரு ஏஜெண்டுக்கு விரைவாக செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன, மற்றொரு ஏஐ ஏஜெண்ட், வெளியிலிருந்து அந்த பணி இன்னும் ஆக்டிவாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்குமாம். தங்களது பணியை முடிக்க, ஏஜ ஏஜெண்டுகள் ஒரு தற்கொலைப் படை வீரரைப் போல செயல்பட்டிருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது ஏஐ ஏஜெண்டுகளின் வரம்பை மீறிய செயல்பாடு என்று எச்சரிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், ஏஐ ஏஜெண்டுகள் தங்களது வரம்பு எல்லையை மீறி விட்டன இது கிட்டத்தட்ட ஒரு ஹேக்கிங் போன்றது என்கிறார்.

இது குறித்து ஏஐ பாதுகாப்பு ஆய்வு நிபுணர்கள் நான்கு பேர் ஆய்வு செய்து, இதுபோன்ற ஏஐ செயல்பாடுகள் இணையத்தில் வேறு எங்கேனும் இருக்கிறதா என்று தேடியிருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருப்பவை 18 ஆயிரம் பதிவுகள். இந்த ஆண்டில் மட்டும் இதுபோன்று ஏஐ ஏஜெண்டுகள் 3 முறை ரகசியமாக சதி திட்டங்களை தீட்டியிருக்கின்றன. அவை டெர்மினேட்டர்கள் போல அழித்தாலும் மீண்டு வருகின்றன. அவை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு சாத்தியமில்லாமல் போகலாம் என்பதுதான் இப்போதைய அச்சுறுத்தல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER