FOLLOW US

ON GOOGLE DISCOVER

எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் அண்ணா பெயரை நீக்கியது நியாயமா? திமுக கேள்வி

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் அண்ணா பெயரை நீக்கியது குறித்து பேரவையில் திமுக கேள்வி எழுப்பியது பற்றி...

News image

ஐ.பெரியசாமி

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:58 am IST

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சித் திட்டம் எனப் பெயர் மாற்றியது நியாயம்தானா என்று பேரவையில் முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார்.

பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதலாண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 2-ஆவது ஆண்டில் ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் இப்போது முடிந்துள்ளன. 3-ஆவது ஆண்டில் இன்னும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 35,000 பேருக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் பெயரை வெற்றி வீடு கட்டும் திட்டம் என்று மாற்றி, அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆண்டுக்கு 70,000 வீடுகள்தான் கட்டப்படும் என்று எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு நிதி ஒதுக்கி இருப்பது ரூ.3,500 கோடிதான். அதன்படி, 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் வீடுகள்தான் கட்ட முடியும். ஆனால், எப்படி 8 லட்சம் வீடு கட்ட முடியும் என்றார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த்: ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடு கட்ட வேண்டும் என்று திமுக ஆட்சியில் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், நான் சென்று பார்க்கும்போது வீடுகள் இன்னும் முடிக்கப்படாமல், அடித்தளம் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஏன் என்று கேட்டால், ரூ.3.5 லட்சம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

மக்கள் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று முதல்வர் கவனத்துக்கு வந்தவுடன், அதை ரூ.5 லட்சமாக உயர்த்தினார். இலக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்பதல்ல, யாருக்காக இருந்தாலும் வீட்டை முழுமையாகக் கட்டிக்கொடுக்க வேண்டும். அதற்காக இப்போது 70,000 வீடுகளை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம்.

ஐ.பெரியசாமி: கொள்கைத் தலைவர் எனச் சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சித் திட்டம் என மாற்றியது நியாயமா?. மறுமலர்ச்சித் திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் விலையும் அதிகரித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.