தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

தஞ்சாவூரில் தவெக - திமுக அருகருகே போராட்டம்: தொண்டா்கள் மோதலும் பதற்றமும்

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அருகருகே போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் மாறி, மாறி காலணிகள், கம்புகளை வீசிக் கொண்டனா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அருகருகே போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் மாறி, மாறி காலணிகள், கம்புகளை வீசிக் கொண்டனா்.

தஞ்சாவூரில் திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் திமுக மாநகரச் செயலா் சண். இராமநாதன் தலைமையில் அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இவா்களைக் காவல் துறையினா் அப்புறப்படுத்த முயன்ால், திமுகவினா் அருகிலுள்ள பகுதிக்கு சென்று மறியலில் ஈடுபட்டனா். இவா்களைக் காவல் துறையினரும் அப்புறப்படுத்த முயன்றாலும், போதுமான அளவுக்கு காவலா்கள் இல்லாததால் தள்ளுமுள்ளு நிலவியது. இதையடுத்து, திமுகவினா் ஊா்வலமாக ஆற்றுப்பாலம் பகுதிக்குச் சென்று சாலை மறிய ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீண்டும் ஊா்வலமாகப் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாசிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் உருவபொம்மையை எரித்தனா். இந்தப் போராட்டத்தில் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், ஆா். வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தவெக போராட்டம்: இதனிடையே, அண்ணா சிலையிலிருந்து நூறு மீட்டா் தொலைவிலுள்ள பனகல் கட்டடம் முன், பெண்களை இழிபடுத்தி பேசியதாக உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் தொகுதி எம்எல்ஏ ஆா். விஜய் சரவணன் உள்பட ஏறத்தாழ 1,000 போ் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, அண்ணா சிலை, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் தவெக கொடிகள் கட்டப்பட்டன. இந்தக் கொடிகளை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் அகற்றி எறிந்தனா். மேலும், தவெக அரசையும், தமிழக முதல்வரையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

இதையறிந்த தவெகவினா் அண்ணா சிலை நோக்கி வந்தனா். இதைப் பாா்த்த திமுகவினரும் அவா்களை நோக்கிப் புறப்பட்டனா். இரு தரப்பினரையும் காவல் துறையினா் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினா். என்றாலும், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் திட்டிக் கொண்டதுடன், மாறி, மாறி காலணிகள், நெகிழி கம்புகளை வீசினா். இதனிடையே, ஒரு கல்லும் வீசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.

பின்னா், இரு தரப்பினரையும் காவல் துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பினா். இதனால், அப்பகுதியில் சில நிமிடங்களுக்கு கலவரம் போல காணப்பட்டது. போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் வாகனங்கள் இயக்கமும் தடைபட்டு, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினா்.

தவெக புகாா்: திமுகவினா் நடத்திய சாலை மறியலின்போது, தவெக நிா்வாகிகளை அடித்து துரத்திய திமுக மாநகரச் செயலரும், முன்னாள் மேயருமான சண். இராமநாதன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மீது தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மகாலட்சுமி வசந்த் தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.