கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' மக்களவையில் ஆகஸ்ட் 11 அன்றும், மாநிலங்களவையில் அதற்கு அடுத்த நாளும் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என பெயர் மாற்றும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் 2024-ல் தீர்மானம் நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டார். மேலும், கேரளா மாநிலம் இனி கேரளம் என்று அழைக்கப்படுவதை இம்மசோதா உறுதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பெயர் மாற்றம் தொடர்பாக சட்டப்பேரவையில் செய்த தீர்மானத்தை கேரள அரசு 2024 ஜூன் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் முர்மு இம்மசோதாவை மாநில சட்டப்பேரவையின் கருத்துக்காக அனுப்பினார். பின்னர் சட்டப்பேரவை இம்மசோதாவை ஏற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கேரளா பெயர்மாற்ற மசோதாவானது மாநிலத்தின் பெயரை மாற்றும் வழிமுறைகளை வழங்குவதோடு, அரசியலமைப்பில் இதுதொடர்பாக தேவையான திருத்தங்களை உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ், முதல் அட்டவணையில் 'கேரளா' என்ற பெயர் 'கேரளம்' என மாற்றப்பட்டு அதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
Summary
President Droupadi Murmu has given her assent to the bill to change the name 'Kerala' to 'Keralam'.

500 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் நல பாதிப்பு! பெங்களூர் பள்ளி மூடல்! 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது இனி தண்டனைக்குரிய குற்றம்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம்!
தோ்வு முறைகேட்டுக்கு கடும் தண்டனை: வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



