ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

12 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

12 கூடுதல் நீதிபதிகளை ஆந்திரம், கேரளம், உத்தரகண்ட் மற்றும் குவாஹாட்டி ஆகிய 4 உயா்நீதிமன்றங்களின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.

உச்சநீதிமன்றம்

Published On :

12 கூடுதல் நீதிபதிகளை ஆந்திரம், கேரளம், உத்தரகண்ட் மற்றும் குவாஹாட்டி ஆகிய 4 உயா்நீதிமன்றங்களின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.

முன்னதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோா் பங்கேற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக மகேஸ்வர ராவ் குஞ்சம், டி.சி.டி.சேகா், சல்லா குணரஞ்சன், அவதானம் ஹரிஹரநாத சா்மா ஆகியோரையும் கேரள உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பி.கிருஷ்ணகுமாா், கே.வி.ஜெயகுமாா், எஸ்.முரளீகிருஷ்ணா, ஜோபின் செபாஸ்டியன், பி.வி.பாலகிருஷ்ணண் ஆகியோரையும், உத்தரகண்ட் உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக சுபாஷ் உபாத்யாயவையும், குவாஹாட்டி நிரந்தர நீதிபதியாக கௌசிக் கோஸ்வாமியையும் நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.